http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, September 27, 2013

விஜய் சேதுபதியால் தள்ளிப்போன பிட்ஷா 2 வில்லா

தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும் ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம் 'பிட்ஷா 2 வில்லா'.
 
இதனை ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். (மேலும்)

அழகுராஜாவுக்காக பெண் கெட்டப்பில் சந்தானம்.

அஜீத் குமாரின்  'ஆரம்பம்' திரைப்படத்துடன் தீபாவளி ரேஸில் களம் இறங்கி மோதுகிறது கார்த்தியின் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. இதில் கார்த்தி நாயகனாகவும், காஜல் அகர்வால் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
 
இவர்களுடன் பிரபு, சரண்யா பொன்வண்ணன், சந்தானம் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.(மேலும்)

Thursday, September 26, 2013

ரஜினிக்கு ஆசைப்படும் சன்னிலியோன்.

கனடாவை சேர்ந்த இந்திய வம்சா வழியான சன்னி லியோன் பாலியல் படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி நடிகையாக வலம் வருகிறார்.

 
தற்போது தமிழ் நடிகர் பரத்துடன் ‘ஜாக்பாட்' என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். (மேலும்)

தொட்டுபார்த்த‌ ரசிகர்: அடிக்க கை ஓங்கிய ஐஸ்வர்யாராய்.

கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தூதுவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று முந்தினம் பஞ்சாபில் உள்ள லுதியானாவில் புதிய நகை கடை திறப்பு விழாவுக்கு சென்றார்.

அங்கு ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் வருகிறார் என விளம்பரபடுத்தப்படிருந்ததால் அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.(மேலும்)

Wednesday, September 25, 2013

தமிழ் ஊடகங்கள் ஏன் இப்படி செயற்படுகிறது? ஓராயிரம் கேள்விகள்.

தமிழ் ஊடகங்கள் இப்போ தனித்து நின்று சமூக விழுமியங்களுடன் செயற்படுவதில்லையா? வெறும் பொழுது போக்குக்காக மட்டுமே தான் ஊடகங்கள் என்ற நிலை வந்துவிட்டதா? அல்லது அரசியல் வாதிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறதா? இப்படி பல கேள்விகள் எழுகிறது.


ஆம் அதாவது இன்றைய தமிழகத்தின் ஆட்சி இரண்டில் தங்கியுள்ளது என்பது உலகத்துக்கே தெரியும் அதாவது ஒன்று சினிமா மற்றொன்று இலங்கை பிரச்சனை. இதை இரண்டையும் வைத்தே உலகளாவியரீதியாக அரசியல் நாடகம் நடத்துகிறது இந்திய அரசு, அதையே உள்ளரங்கில் அரசியல் வியூகம் அமைகிறது தமிழக அரசு.


சமீபத்தில் உலகலாவிய ரீதியாக உற்று நோகக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தல் களம்,... பல ஆண்டுகளுக்கு பின் நடந்து முடிந்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இது இலங்கையின் கொடுங்கோல் அரசன் ராஜபக்ஷவுக்கும், அவனைச் சர்ந்துள்ள சிங்களத்துக்கும் அதிர்ச்சி தரும் சேதி.


இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடைபெற்ற‌து. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற ஒரு தமிழ் அரசியல்வாதி நம் தாயகத்திலிருந்து சென்று தனது அமைப்பின் சார்பாக கொடுங்கோலனுக்கு எதிராக குற்றசாட்டுகளை வைத்து பன்னாட்டு விசாரனையை கோரியிருக்கிறார்.


இலங்கை தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள இந்த சூழ்நிலையில் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை கோரியிருப்பது, குற்றம் சாட்டியிருப்பது அவ்வளவு முக்கியமான செய்தியாக உங்களுக்கு தெரியவில்லையா..!!? ஊடகங்களே?,.....
ஒருவேளை அந்த அரசியல்வாதி அன்புமணி என்பதால்தான் நீங்கள் எழுத மறுக்கிறீர்களா..!!?

தமிழ் தேசியம் பேசும் கட்சியினரும், பொதுப்படைவாதிகளும் எங்கேயய்யா போனீங்க..!!?

பா.ம.க வை பாராட்ட நேரிடுகிறதே என்பதால்தான் மௌனம் காக்கின்றீர்களா..!!? நிச்சயம் பாமகவை பாராட்ட வேண்டிய அவசியம் கிடையாது ஆனால் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு தரும்படி கோரிய‌ அன்புமணி என்ற தனிமனிதனை பாராட்டி இருக்களாம்.

ஆனால் தமிழகத்தில் உண்மையான ஊடகங்கள் செத்து போய் பல வருடங்கள் ஆகின்றன.

ஐ.நா சபையில் தமிழர் நலனுக்காக ஒரு நிகழ்வு நடக்கும்போது திரைத்துறையின் 100 ஆண்டு கொண்டாட்டம்தான் முக்கியம் என தலைப்பு செய்தியாக வாசிக்கும் ஊடகங்களை சாடியிருக்க வேண்டாமா நீங்கள்..!!?

மக்கள் ஊடகமாக அறியப்படும் இணைய உலகத்திலும் ஏன் இந்த ஓரவஞ்சனை..!!?

அது சரி நீங்களேதான் இந்நிகழ்வை கண்டுகொள்ளவில்லை. இதில் எங்கிருந்து நீங்கள் மற்ற ஊடகங்களை சாடுவது.

ஜெனீவா ஐ.நா சபையில் இலங்கை இனப்படுகொலை குறித்து அன்புமணி பேசிய உரை கீழே உள்ளது.
 

இராணுவத்தின் மிரட்டல்: யாழ்ப்பாணத்தில் மெட்ராஸ் கபே.

நடிகர் ஜான் ஆபிரகாம் ‘மெட்ராஸ் கபே’ என்ற திரைப்படத்தை இந்தி, ஆங்கில மொழிகளில் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கோலாலம்பூரில் உள்ள மெட்ராஸ் கபே ஓட்டலில் ராஜீவ் காந்தியை கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாகவும், காட்சிகள் அமைந்துள்ளது.

தமிழகத்தில் ‘மெட்ராஸ் கபே’ படத்துக்கு அனைத்து கட்சிகளும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு (மேலும்)

ரஜினி பன்ஞ் புதிய படத் தலைப்பானது.

தமிழ் சினிமாவில் தற்போது முந்தைய படங்களில் வரும் டயலாக்குகளை தேடிப் பிடித்து அதனை புதிய படத்திற்கு தலைப்பாக சூட்டி வருகிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் டிரன்ட்.


 
அந்த வகையில் வருத்தப்டாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, படங்களைத் தொடர்ந்து மேலும்

ஓட்டலில் கலாட்டா.. செம போதையில் நடிகை த்ரிஷா.

சமீபத்தில் ஹைதராபாதின் தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் நடந்த இரவு விருந்துக்குப் போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. அவருடன் நடிகை சங்கீதாவும் மகேஸ்வரியும் போயிருக்கிறார்கள்.

உடன் வந்தவர்கள் கொஞ்சம் லைட்டான சரக்கில் இறங்கி, (மேலும்)

Tuesday, September 24, 2013

திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

சென்னையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். 


விழாவில், முதல்வர் ஜெயலலிதா உள்படமேலும்

Monday, September 23, 2013

இப்படியொரு சினிமா நூற்றாண்டு விழா தேவைதானா?

நீங்கள் ஒரு சினிமாக்காரன்  என்றால் இது என்னையா புதிர்கதையெனக் கேட்கதோணும், அதுவே நீங்கள் ஒரு சாதாரண குடிமகன் என்றால் அய்யகோ! இது என்ன கொடுமை என்று அழத்தோணும்.  அட‌ ஆமாங்க இந்திய சினிமா நூற்றாண்டு விழாவால் பாதிக்கப்பட்டோரின் குமுறல்..


இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கடந்த 21ந் தேதி சென்னையில் தொடங்கியது. இன்றுடன் (24ந்தேதி) முடிவடைகிறது. தினமும் ஆட்டம் பாட்டம், கேளிக்கைய்க்காக‌ (மேலும்)

Sunday, September 22, 2013

விஜய்யை அவமதித்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா.

நேற்று முந்தினம் ஆரம்பித்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.


தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு (மேலும்)

Saturday, September 21, 2013

இலங்கையின் யாழ் தேர்தல் களத்தில் நடிகர் அஜித்குமார்.


இலங்கையில் நடைபெறும் வட மாகாண சபைக்கான தேர்தலில் பல கட்சிகளும் போட்டியிடும் நிலையில் (மேலும்)

ஜெயலலிதா முன்னால் டான்ஸ் ஆடும் விஜய்.

சென்னையில் இன்று மிகவும் கோலகலமாக ஆரம்பித்துள்ளது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா. இதனை முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேத்தி துவங்கிவைத்துள்ளார்.



இந்நிலையில் தலைவா பிரச்னையால் சென்னையில் நடைபெறும்  (மேலும்)

எனது ஆட்சியால் திரைத்துறை சுதந்திரமாக செயல்படுகிறது: முதல்வர் பேச்சு.

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா துவங்கியது. இந்த விழாவை  குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் தமிழ முதலவர் ஜெயலலிதா.


இவரைத்தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.


இந்த மாபெரும் விழா குறித்து முதல்வர் பேசுகையில்,(மேலும்)

பாடகியானார் நடிகை ரோஜா.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கே.கலைமணி இயக்கும் புதிய படம் ‘ஆப்பிள்பெண்ணே’. இதனை கே.ஜி.பி.பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில் கே.ஜி.பாண்டியன் தயாரிகிறார். 



இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார்.  (மேலும்)

சட்டப்படி ரத்து ஸ்ருதியின் 2வது திருமணம்.

தமிழ், கன்னடப் படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி, கன்னட இயக்குநர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகள் வாழ்ந்தார். இருவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

 


இந்த நிலையில், மகேந்தரை விவாகரத்து செய்த நடிகை ஸ்ருதி,(மேலும்)



காமராஜரை இழிவுபடுத்துவதா?: நடிகர் கருணாஸ் வீடு முற்றுகை.

காமெடி நடிகர் கருணாஸ் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்ததுடன் கருணாஸ் வீட்டின் முன்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நடிகர் கருணாஸ் காமராஜரை (மேலும்)

Friday, September 20, 2013

6 திரைப்பட விமர்சனம் (ஷாமின் நம்பிக்யை வீணடிக்காது)

6(ஆறு) தொடங்கி பத்தாவது நொடியில் அணையை உடைத்துக்கொண்டு பாய்கிறது வேகமாக (கதையை சொல்கிறேன்). கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதட்டம் தொடங்கிவிடுகிறது. அடுத்த காட்சி, அடுத்த காட்சி என்று நம்மில் பதட்டம் தாவி இழுத்துக் கொண்டு ஓடுகிறது. முடியும்போது நம்மையறியாமல் சிந்துகிற ரெண்டு சொட்டு கண்ணீருக்குள்தான் இந்த படத்தின் ஹிட்டும் அடங்கியிருக்கிறது.


ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6-வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள். தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள். (மேலும்)

நூற்றாண்டு விழாவில் எனக்கு அழைப்பில்லை - பாலுமகேந்திரா வருத்தம்.

"தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்' என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி சார்பில் 2 நாள் கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

 
இந்தக் கருத்தரங்கில் இயக்குநர் பாலுமகேந்திரா, எழுத்தாளர்கள் பொன்னீலன், நாஞ்சில்நாடன், ந.முத்துசாமி, திரைப்பட இயக்குநர்கள் ஞானராஜசேகரன், சசி, அம்ஷன் குமார், கௌதமன், சாகித்ய அகாதெமியின் செயலாளர் கே.ஸ்ரீனிவாசராவ், அந்த அமைப்பின் தமிழ் ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி நாச்சிமுத்து, பொறுப்பு அலுவலர் அ.சு. இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த விழாவில் பாலுமகேந்திரா பேசிய‌தாவது,..(மேலும்)

கௌரவ வேடத்தில் 'ஜமாய்'க்கும் ஆனந்த் பாபு.

தமிழில் 2012 வெளிவந்த 'ஏதோ செய்தாய் என்னை' திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்த நடிகர் ஆனந்த பாபு மீண்டும் ' கௌரவ வேடம் ஏற்கவுள்ளார்.

 
கிளாசிக் சினி சர்க்யூட் என்ற படநிறுவனம் சார்பாக எம்.ஜெயக்குமார் தயாரித்து இயக்கும்  (மேலும்)

'பீட்சா 2 தி வில்லா' காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸ்.

விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'பீட்சா'. இந்தப் படத்தை கார்த்திக் சுபுராஜ் என்பவர் இயக்கியிருந்தார். சி.வி. குமார் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கோபி அமர்நாத் ஒளிப்பதி செய்திருந்தார்.

 
இந்தப் படத்தின் 2-ம் பாகம் 'பீட்சா 2 தி வில்லா' என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. (மேலும்)

சிமா விருது நிகழ்வில் ராண -த்ரிஷா ஒரே கிளுகிளுப்பாமே!

திரிஷாவுக்கும் ராணாவுக்கும் இடையில் காதல் தீ பத்தி எரிகிறதென ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால் தங்கள் இருவருக்கும் காதல் இல்லையெனவும் பத்திரிகையளர்கள் வதந்தி பரப்புவதாகவும் இருவரும் சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறைதான்.


இந்நிலையில் இருவரின் இந்த காதல் கிசு, கிசுக்கள் பரவுவதை நம்பாதவர்கள் கூட துபாயில்  (மேலும்)

மனைவி கிருத்திகா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

ந‌டிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.


 
இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், (மேலும்)

அபிநயாவின் நடிப்பில் சொக்கிப்போன‌ அஜீத்குமார்.

சிவா இயக்கும் 'வீரம்' படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் அஜீத்குமார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக  தமன்னா நடிக்கிறார்.


இவர்களுடன் சந்தானம், விதார்த், அபிநயா ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறார்கள். (மேலும்)

Thursday, September 19, 2013

கார்த்தி - கத்ரினா தெரஷா நடிக்கும் புதிய படம் காளி.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான 'ஆல் இன் அல் அழகுராஜா', 'பிரியாணி' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. 

 

இதைத்தொடர்ந்து கார்த்தி அடுத்து   (மேலும்)

ஹீரோவாகிறார் நாடோடிகள் பரணி - கன்னகோல்!

பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் அறிமுகமானவர் பரணி. நாடோடிகள் படத்தில் நண்பனின் காதலுக்காக போராடும் சசிகுமாரின் அணியில் இருந்து காது செவிடாகும் கேரக்டரில்  நடித்தபோது பாப்புலர் ஆனார்.


அதுக்கு பிறகு தூங்கா நகரம், விலை படங்களில் நடித்தார். பரணி இப்போது ஹீரோவாகி இருக்கிறார். (மேலும்)

வடிவேலுன்னா நோ விவேக்குன்னா ஓகே..இது அம்மாவின் டைம்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தென்னிந்திய திரை உலகம் தயாராகி வருகிறது. 



தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள திரை உலகை சேர்ந்தவர்கள் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். தமிழக முதல்வர் இதில் கலந்து கொள்ளுகிறார். (மேலும்)

லிங்குசாமி - சூர்யாவின் 'ரவுடி' ஆரம்பம்.

சிங்கம் II திரைப்படத்தை தொடர்ந்து  நடிகர் சூர்யா  இரணடு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. 



இந்த நிலையில் இரண்டு படத்தின் வேலைகளும் தொடங்கியுள்ளது. (மேலும்)

சிம்பு வயித்தெரிச்சலை சம்பாதித்த‌ ஹன்சிகாவின் தாய்.

ஹன்சிகாவின் திருமணம் பற்றி அவரது தாயார் மோனா மோத்வானி அளித்த பதில், சிம்புவின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவதாகவும், ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்ப்பதாகவும் அமைந்துள்ளது.


அதாவது சிம்பு-ஹன்சிகா காதல் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. (மேலும்)

சீனுராமசாமியுடன் இணையும் விஜய் சேதுபதி படம் இடம் பொருள் ஏவல்.

தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்து பேசப்பட்ட இயக்குனர் சீனுராமசாமி.
 
 
இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகிவிட்டார். (மேலும்)

Wednesday, September 18, 2013

நூற்றாண்டு படவிழா: தமிழக அரசு ரூ 10கோடி நிதி உதவி.

சென்னையில், வரும் 21ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரை, இந்திய சினிமா நுற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழா தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் சென்னையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:‍ (மேலும்)

கமலஹாசனின் கனவுப்பட வேலைகள் மீண்டும் ஆரம்பம்.

நடிகர் கமலஹாச‌ன் தனது கனவுப்படமான மருதநாயகம் திரைப்படத்தின் படவேலைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளார்.


கடந்த 1997ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மூலம்  'மருதநாயகம்' திரைப்படத்தின் பட பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. (மேலும்)


நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவு - பரபரப்பு தகவல்.

ந‌டிகை அஞ்சலி சித்தி வீட்டில் இருந்து மாயமான பிறகு முதல் தடவையாக போலீஸ் நிலையத்தில் தலை காட்டினார். அதன் பிறகு யாரும் அவரை பார்க்க வில்லை.
 
அஞ்சலி எங்கு இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. தெலுங்கு படங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்தன. (மேலும்)

ஆடை நழுவி விழுந்தது தெரியாமல் ஆட்டம் போட்ட‌ நடிகை!

சமீபத்தில் 'சைமா' விருது வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது இந்த விழாவில் ஆடை நழுவி விழும் அளவுக்கு நடனமாடியுள்ளார் நடிகை ராகினி.



கன்னடப் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் ராகினி. மேலும்

விஜய்யை கலாய்த்த வெள்ளைக்கார பெண்... மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்.

வழக்கமாய் விஜய் ரசிகர்கள் அஜீத்தை கலாய்ப்பதும், அஜீத் ரசிகர்கள் விஜய்யை கலாய்ப்பதும் ஆன்லைனில் தினமும் நடக்கும் விளையாட்டு.

ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் ரசிகர்கள் கொதித்தெழுந்து சண்டைக்கு கிளம்ப வைத்துள்ளது விஜய் தொடர்பாக வெள்ளைக்கார பெண் செய்த ட்வீட்.
அதாவது நடந்து என்னவென்றால் (மேலும்)

Tuesday, September 17, 2013

மதகஜராஜா திரைப்பட ரிலீஸூக்கு நீதிமன்றம் நிபந்தனை.

"மதகஜராஜா' திரைப்படத்தை வெளியிட அதன் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சுந்தர்சி இயக்கத்தில் விஷால்  அஞ்சலி வரலட்சுமி, சதா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மதகஜராஜா'.இதனை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.  (மேலும்)

ஷாரூக் சாதனையை முறியடிப்பேன்: சவால் விடும் சல்மான்.

'பிக் பாஸ் 7' நிகழ்ச்சியை தொகுத்துத் வழங்கவிருக்கிறார் சல்மான் கான். அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.


இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சல்மான் கான், “நான் ரம்ஜான் நோன்பின்போது ஷாருக்கானை கட்டிப்பிடித்தேன். நான் மட்டுமல்ல, அந்நேரத்தில் யாராக இருந்தாலும் அவ்வாறுதான் செய்வார்கள். அது ஒரு மனித இயல்பு.


எனக்கு அவர் மீது எந்த ஒரு (மேலும்)

கேயார் பதவிக்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த 7–ந்தேதி சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு கேயார், கலைப்புலி தாணு போட்டியிட்டனர்.

இதில் தலைவராக கேயார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பொறுப்பு ஏற்று பணிகளை கவனித்து வந்தார் (மேலும்)

கிரிக்கெட் பாலாஜி திருமணம்- திரை பிரபலங்கள் நேரில் வாழ்த்து.

சென்னையைச் சேர்ந்த பிரபல மாடல் பிரியா தலூரை மணந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி.  இவர்கள் இருவரது திருமணமும் சென்னையில் மிகவும் எளிமையாக நடந்தேறியது.

 
மிகவும் எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பாலாஜி, பிரியா திருமணம் காதல் திருமணமாகும். (மேலும்)

ஊருக்கு உபதேசம் அப்படி போகிறது தேவயானி அட்வைஸ்.

ஆபரேஷன், சிசேரியன் என பெரும்பாலான பிரசவங்களினால் கத்தி, கத்தரி போட்டு தாயிடமிருந்து சேயை பிரித்தெடுக்கும் இன்றைய இந்திய மருத்துவ உலகத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி (சும்மா பேச்சுக்கு...) இதுவரை சுமார் 12,000 குழந்தைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் நார்மல் டெலிவரி என்னும் சுகப்பிரசவத்தின் மூலம் இப்பூமிக்கு தருவித்து, 



தாயையும் சேயையும் நலமாக வீடு திரும்பவைத்துவரும் டபிள்யூ.சி.எப். எனப்படும் வுமன் அண்ட் சில்ரன் பவுண்டேஷன் 2001ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. மேலும்

கணவருடன் தீர்வு காண யுக்தாமுகிக்கு நீதிமன்றம் ஆலோசனை.

கணவருடன் சமரச தீர்வு காணுமாறு நடிகை யுக்தாமுகிக்கு கோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது. 


நடிகையும் முன்னாள் உலக அழகியுமான யுக்தா முகி நாக்பூரை சேர்ந்த ஓட்டல் அதிபர் பிரின்ஸ் துலியை காதலித்து கடந்த 2008–ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

 
இந்த நிலையில் கணவரை பிரிந்து யுக்தாமுகி  (மேலும்)

தனது ரசிகையை மணக்கிறார் காமெடி நடிகர் பிளாக் பாண்டி.

கோலிவுட் சினிமாவில் கில்லி, ஆட்டோகிராப், அங்காடி தெரு, தெய்வத்திருமகள், வேலாயுதம், நீர்பறவை, மாசாணி உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் பிரபல காமெடி நடிகர் பிளாக் பாண்டி. 


தற்போது இவரின் கைவசம் 10–க்கும் மேற்பட்ட புதுப்படங்கள் உள்ளன.


இந்நிலையில் பிளாக் பாண்டிக்கு திருமணம் (மேலும்)

என்னை ஆண்டவா என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்.

நான் கடவுள் இல்ல என்கிறேன் நீங்கள் கடவுளை கல் என்கிறீர்கள் இதுதான் எனக்கும் உங்களுக்கு இடயேயான வித்தியாசம் என கடவுளை நம்புகிறவர்களுக்கு தனது நாத்திக போக்கில் பதில் அளிப்பவர் கமலஹாசன்.

அப்படிப்பட்ட அவர் தனது திறமை, முயற்சி, உழைப்பு இவற்றையே மூலதனமாகக்கொண்டு இன்று வரை  (மேலும்)

Monday, September 16, 2013

ரசிகரின் செல்போனை பிடுங்கி எறிந்த சல்மான் கான்

சர்ச்சைகளுக்கு பெயர்போன பாலிவுட்டின் செல்லப்பிள்ளை சல்மான், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்குமாரை பார்வையிட சென்றார். 


அப்போது அங்கு ஏராளமான பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் கூடியிருந்ததால் தனது காரில் இருந்து  சல்மான் இறங்கவில்லை (மேலும்)

நிருபர்களை தரகுறைவாக விமர்சித்த - ஆர்.கே.செல்வமணி.

சென்னை: தமிழ் திரைப்பட‌ இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ செல்வமணி குறும்பட விழாவில் தமிழ் பத்திரிகை நிருபர்களை மிகவும் கேவலாமாக வசைபாடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



டைரக்டர் களஞ்சியத்தின் 'தமிழ்' எனும் தலைப்பிடப்பட்ட குறும்படம் (மேலும்)

 

Copyright @ 2013 எமது ஈழம் .