http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, September 27, 2013

விஜய் சேதுபதியால் தள்ளிப்போன பிட்ஷா 2 வில்லா

தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும் ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம் 'பிட்ஷா 2 வில்லா'.
 
இதனை ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். (மேலும்)

அழகுராஜாவுக்காக பெண் கெட்டப்பில் சந்தானம்.

அஜீத் குமாரின்  'ஆரம்பம்' திரைப்படத்துடன் தீபாவளி ரேஸில் களம் இறங்கி மோதுகிறது கார்த்தியின் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. இதில் கார்த்தி நாயகனாகவும், காஜல் அகர்வால் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
 
இவர்களுடன் பிரபு, சரண்யா பொன்வண்ணன், சந்தானம் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.(மேலும்)

Thursday, September 26, 2013

ரஜினிக்கு ஆசைப்படும் சன்னிலியோன்.

கனடாவை சேர்ந்த இந்திய வம்சா வழியான சன்னி லியோன் பாலியல் படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி நடிகையாக வலம் வருகிறார்.

 
தற்போது தமிழ் நடிகர் பரத்துடன் ‘ஜாக்பாட்' என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். (மேலும்)

தொட்டுபார்த்த‌ ரசிகர்: அடிக்க கை ஓங்கிய ஐஸ்வர்யாராய்.

கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தூதுவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று முந்தினம் பஞ்சாபில் உள்ள லுதியானாவில் புதிய நகை கடை திறப்பு விழாவுக்கு சென்றார்.

அங்கு ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் வருகிறார் என விளம்பரபடுத்தப்படிருந்ததால் அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.(மேலும்)

Wednesday, September 25, 2013

தமிழ் ஊடகங்கள் ஏன் இப்படி செயற்படுகிறது? ஓராயிரம் கேள்விகள்.

தமிழ் ஊடகங்கள் இப்போ தனித்து நின்று சமூக விழுமியங்களுடன் செயற்படுவதில்லையா? வெறும் பொழுது போக்குக்காக மட்டுமே தான் ஊடகங்கள் என்ற நிலை வந்துவிட்டதா? அல்லது அரசியல் வாதிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறதா? இப்படி பல கேள்விகள் எழுகிறது.


ஆம் அதாவது இன்றைய தமிழகத்தின் ஆட்சி இரண்டில் தங்கியுள்ளது என்பது உலகத்துக்கே தெரியும் அதாவது ஒன்று சினிமா மற்றொன்று இலங்கை பிரச்சனை. இதை இரண்டையும் வைத்தே உலகளாவியரீதியாக அரசியல் நாடகம் நடத்துகிறது இந்திய அரசு, அதையே உள்ளரங்கில் அரசியல் வியூகம் அமைகிறது தமிழக அரசு.


சமீபத்தில் உலகலாவிய ரீதியாக உற்று நோகக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தல் களம்,... பல ஆண்டுகளுக்கு பின் நடந்து முடிந்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இது இலங்கையின் கொடுங்கோல் அரசன் ராஜபக்ஷவுக்கும், அவனைச் சர்ந்துள்ள சிங்களத்துக்கும் அதிர்ச்சி தரும் சேதி.


இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடைபெற்ற‌து. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற ஒரு தமிழ் அரசியல்வாதி நம் தாயகத்திலிருந்து சென்று தனது அமைப்பின் சார்பாக கொடுங்கோலனுக்கு எதிராக குற்றசாட்டுகளை வைத்து பன்னாட்டு விசாரனையை கோரியிருக்கிறார்.


இலங்கை தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள இந்த சூழ்நிலையில் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை கோரியிருப்பது, குற்றம் சாட்டியிருப்பது அவ்வளவு முக்கியமான செய்தியாக உங்களுக்கு தெரியவில்லையா..!!? ஊடகங்களே?,.....
ஒருவேளை அந்த அரசியல்வாதி அன்புமணி என்பதால்தான் நீங்கள் எழுத மறுக்கிறீர்களா..!!?

தமிழ் தேசியம் பேசும் கட்சியினரும், பொதுப்படைவாதிகளும் எங்கேயய்யா போனீங்க..!!?

பா.ம.க வை பாராட்ட நேரிடுகிறதே என்பதால்தான் மௌனம் காக்கின்றீர்களா..!!? நிச்சயம் பாமகவை பாராட்ட வேண்டிய அவசியம் கிடையாது ஆனால் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு தரும்படி கோரிய‌ அன்புமணி என்ற தனிமனிதனை பாராட்டி இருக்களாம்.

ஆனால் தமிழகத்தில் உண்மையான ஊடகங்கள் செத்து போய் பல வருடங்கள் ஆகின்றன.

ஐ.நா சபையில் தமிழர் நலனுக்காக ஒரு நிகழ்வு நடக்கும்போது திரைத்துறையின் 100 ஆண்டு கொண்டாட்டம்தான் முக்கியம் என தலைப்பு செய்தியாக வாசிக்கும் ஊடகங்களை சாடியிருக்க வேண்டாமா நீங்கள்..!!?

மக்கள் ஊடகமாக அறியப்படும் இணைய உலகத்திலும் ஏன் இந்த ஓரவஞ்சனை..!!?

அது சரி நீங்களேதான் இந்நிகழ்வை கண்டுகொள்ளவில்லை. இதில் எங்கிருந்து நீங்கள் மற்ற ஊடகங்களை சாடுவது.

ஜெனீவா ஐ.நா சபையில் இலங்கை இனப்படுகொலை குறித்து அன்புமணி பேசிய உரை கீழே உள்ளது.
 

இராணுவத்தின் மிரட்டல்: யாழ்ப்பாணத்தில் மெட்ராஸ் கபே.

நடிகர் ஜான் ஆபிரகாம் ‘மெட்ராஸ் கபே’ என்ற திரைப்படத்தை இந்தி, ஆங்கில மொழிகளில் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கோலாலம்பூரில் உள்ள மெட்ராஸ் கபே ஓட்டலில் ராஜீவ் காந்தியை கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாகவும், காட்சிகள் அமைந்துள்ளது.

தமிழகத்தில் ‘மெட்ராஸ் கபே’ படத்துக்கு அனைத்து கட்சிகளும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு (மேலும்)

ரஜினி பன்ஞ் புதிய படத் தலைப்பானது.

தமிழ் சினிமாவில் தற்போது முந்தைய படங்களில் வரும் டயலாக்குகளை தேடிப் பிடித்து அதனை புதிய படத்திற்கு தலைப்பாக சூட்டி வருகிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் டிரன்ட்.


 
அந்த வகையில் வருத்தப்டாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, படங்களைத் தொடர்ந்து மேலும்

ஓட்டலில் கலாட்டா.. செம போதையில் நடிகை த்ரிஷா.

சமீபத்தில் ஹைதராபாதின் தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் நடந்த இரவு விருந்துக்குப் போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. அவருடன் நடிகை சங்கீதாவும் மகேஸ்வரியும் போயிருக்கிறார்கள்.

உடன் வந்தவர்கள் கொஞ்சம் லைட்டான சரக்கில் இறங்கி, (மேலும்)

Tuesday, September 24, 2013

திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

சென்னையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். 


விழாவில், முதல்வர் ஜெயலலிதா உள்படமேலும்

 

Copyright @ 2013 எமது ஈழம் .