http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Sunday, May 12, 2013

நாகராஜசோழன் MA, MLA விமர்சனம் - அடங்.. கொக்காமக்கா தாமர வரணியில் தலை முழுக!

நடிகர்கள்: சத்யராஜ்,          வர்ஷா அஸ்வதி,                மணிவண்ணன்,   சீமான்,     ரகுவண்ணன்         
 
இயக்கம்:  மணிவண்ணன்
 
இசை: ஜேம்ஸ் வசந்தன்
 
ஓளிப்பதிவு :  டி.சங்கர்

தயாரிப்பு:எஸ்.  ரவிச்சந்திரன்,   கே சுரேஸ்

ஓர் அரசியல்வாதியும் அவரது அல்லக்கையும் என்று பெயர் வைத்திருக்கலாம் ...அட...கொக்காமக்கா-வில் ஆரம்பிக்கும் அதிரடி அரசியல் வசனம் படம் முடிந்து வீடு போய்ச் சேர்ந்த பின்பும் காதில் விழுந்துக்கொண்டிருந்தது....உய்..உய்..னு..


அட..கொக்காமக்கா மகாதேவிஅரசிளங்குமாரி காலத்தில் வரவேண்டிய படம் ..இப்போ ப்பே..பேய்..னு இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசி நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற காலகட்டத்தில் வந்திருப்பது (நமக்கு) போதாத காலம்.ஆனாலும் இரண்டு பெருசுகளின் அட்டகாசமான நக்கலும் விக்கலும்..நல்லா நேரம் போகிறது.


1994ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அமைதிப் படை’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளிவந்துள்ளது. பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வெளி வந்தால், முதல் பாகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி பார்க்கப் போனால், இந்த நாகராஜ சோழன் நம்மை கொஞ்சம் சோதித்துப் பார்க்கிறார்.

அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் நாகராஜ சோழன் தனது செல்வாக்கையும், முதல் மந்திரியின் ஊழல் மற்றும் கொலை, கொள்ளைகளை மிரட்டி, அரசியலில் துணை முதல் மந்திரி பதவியை பெற்றுக் கொள்கிறார். ஏற்கெனவே, கொலை, கொள்ளை, ஊழலில் திளைத்திருந்த நாகராஜ சோழனுக்கு துணை முதல் மந்திரி பதவி கொடுக்கப்பட்டதும் கூடுதலாக ஆட்டம் போடுகிறார்.  மேலும் பதிவினை படிக்க‌

USB பிளாஷ் டிரைவ்வை பயன்படுத்தி Window7 ஐ நிறுவுவது எப்படி?

இன்றைய பதிவில் USB பிளாஷ் டிரைவ்வை பயன்படுத்தி எவ்வாறு விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தை கணணியில் நிறுவுவது என்று பார்ப்போம். USB பிளாஷ் டிரைவ்வை பயன்படுத்தி விண்டோஸ் 7 நிறுவது என்பது DVD யில் இருந்து விண்டோஸ் 7யை நிறுவதற்கு சமமானது.பல வசதிகளை பயன்படுத்தி எவ்வாறு Bootable USBடிரைவ் உருவாக்கி அதனுள் விண்டோஸ் 7யை நகலடுப்பது என்று இப்போது கவனிப்போம்.


குறிப்பு : விண்டோஸ் 7 யை சேமிக்க குறைந்த பட்சம் 4 GB கொள்ளளவு கொண்ட USB டிரைவ் தேவை

Windows 7 USB/DVD Download Tool

உங்களிடம் விண்டோஸ் 7 உடைய ISO இமேஜ் (Image) கோப்பு இருந்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச வசதியினை பயன்படுத்தி  இலகுவாகவும் விரைவாகவும் உங்களுடைய USB பிளாஷ் டிரைவ்வினுள் இமேஜ் யை பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்தினால் .NET Framework 2.0மற்றும் Microsoft Image Mastering API v2 என்ற இரு மென்பொருட்களும் தேவைப்படும். இவற்றை கிழே உள்ள இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Download Windows 7 USB/DVD Download Tool

Download  WinToFlash  

முதலில் உங்களது USB பிளாஷ் டிரைவ்வை NTFS ஆக  Format செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது நேரடியாகவே செய்முறைக்கு செல்வோம், விண்டோஸ் 7 ISO கோப்பு உள்ள இடத்தை  கொடுங்கள் அதோடு கிழே உள்ள  "Next" யை கிளிக் செய்து தொடருங்கள்.

 









 பின்னர் USB டிரைவ்வை தெரிவு செய்யுங்கள்,  இங்கே உள்ள மேலதிக தெரிவை உபயோகித்து உங்களுக்கு தேவை என்றால் ISO கோப்பை DVD யாகவும்  burn செய்துகொள்ளலாம்.





அதை தொடர்ந்து குறித்த USB டிரைவ்வை தெரிவு செய்து, "Begin Copying" என்பதை அழுத்துங்கள்.







அதை தொடர்ந்து குறித்த USB டிரைவ்வை தெரிவு செய்து, "Begin Copying" என்பதை அழுத்துங்கள்







அதை தொடர்ந்து செயற்பாடுகள் முடிந்த பிற்பாடு USB டிரைவ்வினுள் விண்டோஸ் நிறுவதற்கு தேவையான அனைத்து  கோப்புக்களும் அங்கே காணப்படும்.  இனி நீங்கள் USB டிரைவ்வில் இருந்து பூட் செய்து விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவுதல் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம்.


WinToFlash  

விண்டோஸ் 7 நிறுவதல் இறுவட்டில் உள்ள கோப்புக்களை USB டிரைவ்வுக்கு பரிமாற்றிக்கொள்ள இது இன்னுமொரு சிறந்த வசதி. இப்பொழுது நேரடியாகவே Wizard  செய்முறைக்கு செல்வோம் , விண்டோஸ் 7 யை USB இருந்து நிறுவதற்கு தயாராகுங்கள்.


இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் வித்தியாசமமான அட்வான்ஸ் அம்சங்களையும்,வேறு பட்ட விண்டோஸ் பதிப்புக்களையும் இது 
 வழங்குகின்றது.





அடுத்து விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டின் இடத்தையும் பரிமாற்ற போகும் USB டிரைவ் இடத்தையும் கொடுக்க வேண்டும். இங்கே DVD டிரைவ் E: யாகவும் USB டிரைவ் F: ஆகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் செய்முறை வேகத்தை அதிகரிக்க உங்களது Anti வைரஸ்யை மூட சொல்லி வேண்டுகோள் இடப்படும் அனால் கணணியில் MSE  வேலை செய்வதால் வேகத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்படாது.

  
அடுத்து, நீங்கள் 7 விண்டோஸ் EULA வுக்கு இணங்க வேண்டும், அதோடு "Continue" யை அழுத்துங்கள்.







இப்போது டிரைவ் Format செய்யப்பட்டு கோப்புக்கள் அனைத்தும் USB டிரைவ்வினுள் சேமிக்கும் செயன்முறைகள் முடியும் வரைக்கும் காத்திருக்கவும்.












முடிந்தது, இனி  இனி நீங்கள் USB டிரைவ்வில் இருந்து பூட் செய்து எந்த கணணியிலும் விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவுதல் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம்.


 

இறுதியாக இந்த இரு மென்பொருட்களில் எது உங்களுக்கு சிறந்தது என தெரிவு செய்து விண்டோஸ் 7 நிறுத்தல் கோப்புக்களை USB பிளாஷ் டிரைவ்வுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.



  

கம்புயூட்டர் மெமறியை பாதுக்காப்பதி எப்படி?

கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி, அப்படி ரீஸ்டார்ட் செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும் இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.  இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும் இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
Check Disk செய்யும் முறை:
1. My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2. அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab-ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3. இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4. இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது. எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5. இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது. எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள். மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப்படும்.
6. மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ்) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
Hard Disk-ஐ பரமரிப்பது முக்கியமான கடமை. எனவே முதலில் chkdsk (Check Disk)செய்து Hard Disk-ஐ காப்பாற்றுங்கள்.

 

Copyright @ 2013 எமது ஈழம் .