http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, August 7, 2013

கார்த்திகேயன் பாடலுக்கு கனேடிய பாராளுமன்ற பெண்மணி குத்தாட்டம்.

சமீபத்தில் வெளியாகி, வெற்றி பெற்ற "யுத்தம் செய்' படத்தில் இடம் பெற்ற, ""கன்னித்தீவு பொண்ணா. கட்டெறும்பு கண்ணா...'' என்ற பாடலைப் பாடியவர் எம்.எல்.ஆர்.கார்த்திகேயன்.
இப்பாடல் மூலம் பிரபலமடைந்து, இன்று நிறைய படங்களுக்குப் பாடி வருகிறார்.


3 வயதில் கோவிலில் பாடத் தொடங்கி, 13 வயதில் பள்ளியில் பாடி, 19 வயதில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திடம் கோரஸ் பாடியுள்ளார் எம்.எல்.ஆர். கார்த்திகேயன்.  மேலும்

ப்ளீஸ் நம்புங்க தலைவா அரசியல் படமல்ல: நடிகர் விஜய்

தலைவா’ படம் நாளை மறுநாள் (9–ந்தேதி) தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ‘தலைவா’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அரசியல் படம் என்பதால் தமிழகத்தில் நேரடி அரசியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–  மேலும்

தலைவாவை தமிழகத்தில் திரையிட முடியாது: நேரடி அரசியல் தலையீடு.

சென்னை: அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.


விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 ப்ளஸ் அரங்குகளிலும், வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்திருந்தனர். மேலும்

நடிகர் ஜெயப்பிரகாசுடன் இணைத்து அவதூறு-லட்சுமிராமகிருஷ்ணன் ஆவேசம்.

நடிகர் ஜெயப்பிரகாசுடன் தன்னை இணைந்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

‘பசங்க’ படத்தில் ஜெயப்பிரகாஷ் வாத்தியார் வேடத்தில் நடித்து பிரபலமானார். ‘எதிர்நீச்சல்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘கழுகு’, ‘மங்காத்தா’, ‘மெரினா’ போன்ற படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். (மேலும்)

தலைவா வெளியாகும் 9 தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.


சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் ‘ஐநாக்ஸ்’ என்ற பெயரில் 4 தியேட்டர்கள் உள்ளன. வணிக வளாகம் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளதால் இந்த காம்ப்ளக்ஸ் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.


ஐநாக்ஸ் தியேட்டரில் வருகிற 9–ந் தேதி விஜய் நடித்துள்ள ‘தலைவா’ படம் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த தியேட்டருக்கு ஒரு கடிதம் வந்தது. (மேலும்)

இஷ்டத்துக்கு டைட்டில் வைக்காதீர்கள் - கே.வி.ஆனந்த் ஆவேசம்.

இஷ்டத்துக்கு டைட்டில் வைத்து குழப்பாதீர்கள். என் பட டைட்டிலை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.


சிவாஜி, செல்லமே, முதல்வன் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த் கனா கண்டேன் படம் மூலம் இயக்குனர் ஆனார். அயன், கோ, மாற்றான் படங்களையடுத்து புதிய படம் இயக்குகிறார். (மேலும்)

 

Copyright @ 2013 எமது ஈழம் .