http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, May 2, 2013

சந்தானம் இல்லாட்டியும் என் படம் ஓடும்.. நடிகர் கார்த்தி தடாலடி!


சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் போன்ற ஒரு சில படங்களில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து காமெடியனாக நடித்திருந்தார் சந்தானம். இந்த படங்களில் கார்த்திக்கு கொடுக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம் சந்தானத்துக்கும் கொடுக்கப்படுவது வழக்கம்.

 
ஆனால் கார்த்தி, சந்தானம் இருவருக்கும் இடையினில் என்ன நடந்ததோ இப்போது தனது படங்களுக்கு சந்தானம் வேண்டவே வேண்டாம் என்று கண்டிசனாக சொல்கிறாராம் கார்த்தி.

 
ஏற்கனவே, சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் விவேக் இருந்தாலும், மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சந்தானத்தையும் கதைக்குள் திணித்திருக்கிறார் டைரக்டர் ஹரி.


இதையடுத்து, தான் கார்த்தியை வைத்து இயக்கும் அருவா படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்கும் முடிவில் இருந்தார் ஹரி. ஆனால் கார்த்தி குறுக்கிட்டு, எக்காரணம் கொண்டு சந்தானம் வேண்டாம். வேறு யாராவது காமெடியனை போடுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் சந்தானத்தை பரிசீலனையில் வைத்துள்ளாராம் ஹரி.

 
ஆனால் இதுபற்றி, சந்தானத்தின் மீது கார்த்திக்கு அப்படி என்னதான் கோபம்? என்று விசாரித்தால், மேலும் பதிவினை படிக்க‌

'அந்த பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும்' - பவரின் பஞ்ச்!

திருமங்கலம் காமராஜ் தெருவை சேர்ந்த ரவீந்திரகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறி இருப்பதாவது: 


வேலப்பன் சாவடி,பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ளேன்.

கடந்த மார்ச் 1ம் தேதி அண்ணா நகரை சேர்ந்த சுதர்சன் என்பவர் குறைந்த வட்டியில் பணம் வாங்கித் தருவதாக என்னை அணுகினார். மேலும், கிருஷ்டோபர் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் பதிவினை படிக்க‌

கவுதம் மேனன் - சூர்யா இணையும் துருவநட்சத்திரம் படப்பிடிப்பு தொடங்கியது!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ஸ்டைல் அமைத்து படம் இயக்கி வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன். 

மின்னலே தொடங்கி கடைசியாக இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படம் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்கள் இடையே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் சூர்யாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் இருவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. அதனைத்தொடர்ந்து இப்போது மூன்றாவது முறையாக சூர்யாவும், கவுதம் மேனனும் இணைந்துள்ளனர். மேலும் பதிவினை படிக்க‌

இப்படியும் ஒரு நடிகையா?.. குடும்ப குத்துவிளக்கு காவ்யா மாதவன்!


பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காட்டம் இருந்தால் வேலைக்கு ஆகாதென்று படு கிளாமராகவும், பாலியல் தொழிலாளி வேடங்களிலும் நடித்து அசத்திவருகின்றனர் . 


ஆனால் இப்படி இருக்கும் நடிகைகள் மத்தியில் 'சேத்தில் முழைத்த செந்தாமரையாட்டம்' ஒரு நடிகை உள்ளார்.


அவர் தாணுங்க நடிகை காவ்யா மாதவன். எவ்வளவு பணம், விருது கொடுத்தாலும் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்கிறாராம் இவர்.


‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா, ‘வானம்’ படத்தில் அனுஷ்கா தெலுங்கு படமொன்றில் சார்மி போன்றவர்கள் பாலியல் தொழிலாளி வேடங்களில் நடித்திருக்கின்றனர்.   மேலும் பதிவினை படிக்க‌

காதல் கதைக்கு பக்திபட ரேஞ்சில் டைட்டில் - தணிக்கை குழு எதிர்ப்பு!


காதல் கதையை மையமாகக் கொண்டு அமைந்துள்ள படத்துக்கு பக்திபட ரேஞ்சில் தலைப்பு வைக்க தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்ததால் பட டைட்டில் மாற்றப்பட்டுள்ளது.

 
கே.அர்ஜுனராவ் இயக்கத்தில்  திலீப்குமார், பிரபுராஜ், திவ்யா சிங் போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருப்புகழ். இந்த படம் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.


இப்படி காதல் கதையை கருவாகக்கொண்டு அமைந்துள்ள இந்த படத்துக்கு பக்திப்பட டைட்டிலை வைக்க அனுமதிக்க முடியாது என்று சமீபத்தில் தணிக்கை குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து படத்துக்கு திரு-புகழ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.


இதுபற்றி இயக்குனர் கே.அர்ஜுனராவ் கூறும்போது, மேலும் பதிவினை படிக்க‌

கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்'

ஒரே ஷாட்டில், 2 மணி நேரம் தொடர்ச்சியாக 'அகடம்'  என்ற தமிழ் படத்தை, படமாக்கி கின்னஸ் சாதனை படைத்து இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர் தமிழ் சினிமா கலைஞர்கள்.
லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில், புதுமுகம் இஷாக் இயக்கியுள்ள படம் "அகடம்". முற்றிலும் புதுமுகம் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். பாஸ்கர் இசையமைத்துள்ளார்.
கின்னஸ் சாதனைக்காக கடந்த டிசம்பர் 7ம் தேதி ஒரே ஷாட் மூலம் படம் மொத்தத்தையும் எடுக்க திட்டமிட்டனர் படக்குழுவினர். அதன்படி படம் மொத்தமும் படமாக்கப்பட்டது.மேலும் பதிவினை படிக்க‌மேலும் பதிவினை படிக்க‌

ராகுல் காந்தி கூட்டத்தில் நடிகர் அம்ப்ரிஷ் அவமரியாதை!

கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று 3-வது கட்ட பிரசாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகர் அம்ப்ரிஷ் போட்டியிடுகிறார். கூட்டத்துக்கு அவர் தனது மனைவி நடிகை சுமலதாவுடன் வந்து இருந்தார்.


மேடையின் பின் வரிசையில் நடிகை சுமலதா அமர்ந்து இருந்தார். வேட்பாளர் என்ற வகையில் ராகுல்காந்தி இருக்கை அருகே காலியாக கிடந்த நாற்காலியில் நடிகர் அம்ப்ரிஷ் அமர முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அவரை பின் வரிசையில் அமரும்படி கூறினார். மேலும் பதிவினை படிக்க‌

தமிழிழ் பிரச்சாரம் செய்த நடிகைக்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு!


சாந்தி நகர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடம் என்பதால் அவர் தமிழில் பிரச்சாரம் செய்தார். இதையடுத்து அவர் எப்படி தமிழில் பிரச்சாரம் செய்யலாம் என்று கன்னட அமைப்புகள் பிரச்சனையை கிளப்பியுள்ளனர்.


அவருக்கு எதிராக கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் போராட்டமும் நடத்தின. மேலும் ரம்யா எப்படி தமிழில் பிரச்சாரம் செய்யலாம் என சில டிவி சேனல்களும் விமர்சித்து செய்து ஒளிபரப்பின.

 
இது குறித்து திவ்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,மேலும் பதிவினை படிக்க‌

காதல் கத்தரிக்காயெல்லாம் கிடையாது - நடிகை ஆண்ட்ரியா!


சென்னை : தன்னைக் காதலிப்பதாகச் சொன்ன மலையாள நடிகர் படத்தில் மீண்டும் நடிக்க வந்த வாய்ப்பை ஆண்ட்ரியா உதறினார். 


மலையாள இளம் ஹீரோ பஹத் பாசில். இவர் இயக்குனர் பாசிலின் மகன். இவருடன் ஆண்ட்ரியா ‘அன்னயும் ரசூலும்‘ என்ற படத்தில் நடித்தார். இது ஹிட்டானது. 


இதையடுத்து மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த பஹத், ‘இந்தப் படத்தில் நடித்தபோது ஆண்ட்ரியாவுடன் அதிகமாக பேசவில்லை. மேலும் பதிவினை படிக்க‌

லாவகமாக மனதை கவ்விய 'சூது கவ்வும்' - திரை விமர்சனம்!


நடிகர்கள்:விஜய் சேதுபதி,சஞ்சிதா ஷெட்டி
 

இயக்குநர்: நலன் குமாரசாமி
 

இசை:சந்தோஷ் நாராயணன்
 

ஒளிப்பதிவு:தினேஷ் கிருஷ்னன்
 

தயாரிப்பு:சி.வி.குமார்

நகைச்சுவைக்கென எந்த பார்முலாவும் இல்லாமல் ஒரு புது ரகமாக‌ கதை சொல்லும் படமாக‌ வந்திருக்கும் படம் தான் 'சூது கவ்வும்'. கதை ஒன்றும் அப்படி சினிமாவை புரட்டிப்போடும் வகையறாவெல்லாம் இல்லை. ஆனால் கதாபாத்திரங்களை உருவாக்கியதில் இயக்குநர் காட்டிய அக்கறையும், அவற்றில் இருக்கும் புதுமையும் தான் படத்தின் வெற்றி படியாக அமைந்திருக்கிறதென்பதில் எந்தவித‌ ஐயமுமில்லை..

சரி படத்தின் கதைக்கு வருவம், ஒரு அறையில் வேலையில்லாத மூன்று நண்பர்கள் தங்கியுள்ளனர். விஜய்சேதுபதியுடன் ஒரு ஒயின்ஷாப் சண்டையில் ஒன்று சேர்கிறார்கள். பிறகு சிறுசிறு கடத்தல்களை சீரியசாக செய்து கொண்டு இருக்கிறார்கள். நமக்கு தான் பார்க்க செம காமெடியாக இருக்கிறது.


ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சரின் மகனையே கடத்தி 2கோடி பெறும் திட்டம் உருவாகிறது. கடத்தி பணத்தையும் அமைச்சர் மகனின் உதவியுடன் பெறுகிறார்கள். ஆனால் பணத்துடன் போகும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது. அதனை பயன்படுத்தி அமைச்சரின் மகன் பணத்தை தூக்கிச் சென்று விடுகிறார். மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .