http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, September 25, 2013

தமிழ் ஊடகங்கள் ஏன் இப்படி செயற்படுகிறது? ஓராயிரம் கேள்விகள்.

தமிழ் ஊடகங்கள் இப்போ தனித்து நின்று சமூக விழுமியங்களுடன் செயற்படுவதில்லையா? வெறும் பொழுது போக்குக்காக மட்டுமே தான் ஊடகங்கள் என்ற நிலை வந்துவிட்டதா? அல்லது அரசியல் வாதிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறதா? இப்படி பல கேள்விகள் எழுகிறது.


ஆம் அதாவது இன்றைய தமிழகத்தின் ஆட்சி இரண்டில் தங்கியுள்ளது என்பது உலகத்துக்கே தெரியும் அதாவது ஒன்று சினிமா மற்றொன்று இலங்கை பிரச்சனை. இதை இரண்டையும் வைத்தே உலகளாவியரீதியாக அரசியல் நாடகம் நடத்துகிறது இந்திய அரசு, அதையே உள்ளரங்கில் அரசியல் வியூகம் அமைகிறது தமிழக அரசு.


சமீபத்தில் உலகலாவிய ரீதியாக உற்று நோகக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தல் களம்,... பல ஆண்டுகளுக்கு பின் நடந்து முடிந்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இது இலங்கையின் கொடுங்கோல் அரசன் ராஜபக்ஷவுக்கும், அவனைச் சர்ந்துள்ள சிங்களத்துக்கும் அதிர்ச்சி தரும் சேதி.


இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடைபெற்ற‌து. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற ஒரு தமிழ் அரசியல்வாதி நம் தாயகத்திலிருந்து சென்று தனது அமைப்பின் சார்பாக கொடுங்கோலனுக்கு எதிராக குற்றசாட்டுகளை வைத்து பன்னாட்டு விசாரனையை கோரியிருக்கிறார்.


இலங்கை தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள இந்த சூழ்நிலையில் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை கோரியிருப்பது, குற்றம் சாட்டியிருப்பது அவ்வளவு முக்கியமான செய்தியாக உங்களுக்கு தெரியவில்லையா..!!? ஊடகங்களே?,.....
ஒருவேளை அந்த அரசியல்வாதி அன்புமணி என்பதால்தான் நீங்கள் எழுத மறுக்கிறீர்களா..!!?

தமிழ் தேசியம் பேசும் கட்சியினரும், பொதுப்படைவாதிகளும் எங்கேயய்யா போனீங்க..!!?

பா.ம.க வை பாராட்ட நேரிடுகிறதே என்பதால்தான் மௌனம் காக்கின்றீர்களா..!!? நிச்சயம் பாமகவை பாராட்ட வேண்டிய அவசியம் கிடையாது ஆனால் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு தரும்படி கோரிய‌ அன்புமணி என்ற தனிமனிதனை பாராட்டி இருக்களாம்.

ஆனால் தமிழகத்தில் உண்மையான ஊடகங்கள் செத்து போய் பல வருடங்கள் ஆகின்றன.

ஐ.நா சபையில் தமிழர் நலனுக்காக ஒரு நிகழ்வு நடக்கும்போது திரைத்துறையின் 100 ஆண்டு கொண்டாட்டம்தான் முக்கியம் என தலைப்பு செய்தியாக வாசிக்கும் ஊடகங்களை சாடியிருக்க வேண்டாமா நீங்கள்..!!?

மக்கள் ஊடகமாக அறியப்படும் இணைய உலகத்திலும் ஏன் இந்த ஓரவஞ்சனை..!!?

அது சரி நீங்களேதான் இந்நிகழ்வை கண்டுகொள்ளவில்லை. இதில் எங்கிருந்து நீங்கள் மற்ற ஊடகங்களை சாடுவது.

ஜெனீவா ஐ.நா சபையில் இலங்கை இனப்படுகொலை குறித்து அன்புமணி பேசிய உரை கீழே உள்ளது.
 

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .