http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, April 4, 2013

ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி?


ப்ளாக்கருக்கான டெம்ப்ளேட்களை பல தளங்கள் இலவசமாக தருகின்றன. அவற்றை டவுன்லோட் செய்து, நமது ப்ளாக்கில் நிறுவுவது எப்படி? என்று இப்பதிவில் பார்ப்போம். புதியவர்களுக்காக இந்த பதிவு.




இலவச டெம்ப்ளேட்களை தரும் தளங்கள்:




மேலும் பல தளங்களுக்கு, கூகிள்சர்ச்சில் "Free Blogger Templates" என டைப் செய்து பார்க்கவும்.

டெம்ப்ளேட்களை டவுன்லோட் செய்வது எப்படி?

1. மேல் சொன்ன ஏதாவது ஒரு தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான டெம்ப்ளேட் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

2. அங்கு "Preview" என்பதை க்ளிக் செய்து அந்த டெம்ப்ளேட்டின் மாதிரியை பார்க்கலாம், அல்லது "Download" என்பதை க்ளிக் செய்து அந்த டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


3. ப்ளாக்கர் டெம்ப்ளேட்டின் Format .xml என்று இருக்கும். ஆனால் அதிகமான தளங்கள் டெம்ப்ளேட்களை zip செய்திருப்பார்கள். அதாவது நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் .zip என்ற Format-ல் இருக்கும். அதனை Unzip செய்ய, அந்த ஃபைலின் மீது Right Click செய்து, "Extract Here" என்பதை க்ளிக் செய்யவும்.


4.பின் அது folder-ஆக இருந்தால், அதன் உள்ளே சென்று .xml என்று முடியும் ஃபைலை பார்க்கவும். அது தான் டெம்ப்ளேட் ஃபைல்.

புதிய டெம்ப்ளேட்டை நிறுவுவது எப்படி?

1. Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லவும்.




2. அங்கு மேலே Backup/Restore பட்டனை க்ளிக் செய்து Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.

3.  அதே இடத்தில் Upload a template from a file on your hard drive என்ற இடத்தில் "Browse" பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கணிணியில் நீங்கள் டவுன்லோட் செய்த புதிய டெம்ப்ளேட்டின் ஃபைலை தேர்வு செய்து, "Upload" என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

5. பிறகு "Uploaded Successfully" என்று வரும். உங்கள் புதிய டெம்ப்ளேட் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என அர்த்தம். View Blog என்பதை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்கின் புதிய தோற்றத்தைப் பார்க்கலாம்.


இது பற்றிய வீடியோ செய்முறை:

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .